‘எழுவன்குலம’ எனப்படும் பிரதேசம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளிற்கும் இடையிலான யுத்த காலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளாகிய பகுதியாகும். தலைநகரத்திற்கு தூரத்தில் அரங்கம் இருந்தமையால் கவனம் செலுத்த தவறியமையினாலும் இன்று பொருளாதார நெருக்கடி மற்றும் அதீத வசதி இன்மை போன்ற பிரச்சினைகளால் கஷ்டப்படுகின்றனர்.
அங்கு வசிக்கும் அதிகமானோர் குறைந்த வருமானம் உடையோராக காணப்படுகின்றனர்.
எழுவன்குலம வித்தியாலயம் எனும் பாடசாலை மட்டுமே அப்பிரதேசத்தில் காணப்படும் கல்விக்கூடமாகும். இங்கு சுமார் 200 மாணவர்களோடு சுமார் 20 ஆசிரியர்களைக் கொண்டு கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது.
இப்பாடசாலையில் வகுப்பறை பற்றாக்குறை நூலகம் ஆய்வுகூடம் விளையாட்டு மைதானம் இன்மை விளையாட்டு உபகரணங்கள் பாவிக்கக்கூடிய நிலையில் இல்லாமை போன்ற பிரச்சினைகள் மட்டுமல்லாமல் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உட்படுவதால் இருக்கும் வளங்களும் சேதமடைகின்றன. போக்குவரத்து தங்குமிட வசதிகள் போன்றவையும் பிரதான பிரச்சினைகளின் ஒன்றாக உள்ளது.
பாரிய சவால்களை முகங்கொடுத்தாலும் பாடசாலையின் வளர்ச்சிக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் கடினமாக உழைக்கின்றனர். பாடசாலையில் காணப்படும் இடர்களை நிவர்த்தி செய்து அபிவிருத்தி செய்ய அதிகாரிகளின் உதவியை நாடுகின்றனர். இதன்மூலம் மாணவர்கள் தரமான கல்வியை பெற்றுக்கொள்ளலாம்.
பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
ஆர்.ஏ.ரேணுகா – அதிபர்
‘விடுதலை புலிகளின் யுத்தகளமாக காணப்பட்ட இடத்திலேயே இப்பாடசாலை அமைந்துள்ளது.பல கஷ்டங்களுக்கு மத்தியிலேயே இக்குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். இந்த குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர் கூலித் தொழில்கள் செய்து வருகின்றனர்.’
சீ.கே.விஜேகோன் – ஆசிரியர்
‘நாங்கள் தூர பிரதேசத்திலிருந்து வருகின்றோம். போக்குவரத்து வசதிகள் கூட இல்லை. அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தந்தால் இலகுவாக இருக்கும். அதேவேளை ஆரம்பப் பிரிவிற்கான வகுப்பறை பற்றாக்குறைகளும் காணப்படுகின்றது.அந்த மாணவர்களுக்கு கட்டடங்களை அமைத்துத் தந்தால் வசதியாக இருக்கும்’
எஸ்.டீ. அமில- ஆசிரியர்
‘நான் 300மஅ தூரத்தில் இருந்து வருகின்றேன். தங்குவதற்கு இடமின்மை என்பது முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. வரும் வழியில் காட்டுயானைகள் குறுக்கிடுவதையும் முகங்கொள்ள வேண்டியிருக்கின்றது. இதனால் பாடசாலைக்கு வந்து அழுத்தங்களோடு கற்பிக்க வேண்டியுள்ளது’
ஷமில லியங்கே – ஆசிரியர்
‘இந்த வழியில் காட்டுயானைகள் குறுக்கிடுகின்றன. அவை இங்குள்ள சீசோஇ ஊஞ்சல் போன்றவைகளை சேதப் படுத்துகின்றன. இதற்கான தீர்வை மிக விரைவில் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆர். ஏ. ரேணுகா –
‘எங்களிடம் முறையான கணினி ஆய்வகம் மற்றும் நூலகம் இல்லை. இந்த பற்றாக்குறைகளுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டால்; இந்த குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க முடியும்.’