நாட்டில் மேலும் 1,178 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிந்திக்கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் பதிவான கொவிட் நோயார் எண்ணிக்கை இவ்வாறு அறிக்கையிடப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 585,764 ஆக உயர்வடைந்துள்ளது.