இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 அரிசி கொள்கலன்கள் (கன்ரெய்னா்) துறைமுகத்தில் தேங்கி இருப்பதாகவும், டொலர் நெருக்கடியால் அவற்றை விடுவிக்க முடியாதுள்ளதாகவும் அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளாா்.
கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலரை இன்று (29) வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்ததாகவும் நிஹால் தெரிவித்துள்ளாா்.
இதேவேளை, டொலர் கிடைத்தால் மிக விரைவில் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளாா்.