ரயில் நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும் விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
எனினும் மேற்படி தொழிற்சங்க நடவடிக்கை நாளை(27) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேற்படி சங்கம் அறிவித்துள்ளது.
ரயில் அதிகார சபையுடன் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.