கால்நடைகளுக்கான உணவு தட்டுப்பாடு காரணமாக கோழி, முட்டை உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோழி மற்றும் முட்டை விலை கடுமையாக அதிகரிக்கும் நிலை உருவாகும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 900-1000 ரூபா வரை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகவும், முட்டையொன்றின் விலை 40-50 ரூபா வரையில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
டொலர் நெருக்கடிக்கு மத்தியில் கடன் கடிதம் வழங்க முடியாத காரணத்தால் கோழிகளுக்கான தீவனம் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.