அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு ஒன்று அண்மையில் கொழும்புக்கு வருகை தந்திருந்த போதும் அந்த நிறுவனத்திடம் நிதியுதவிகளை கோரவில்லை என தெரியவருகிறது.
இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்ததால், மாற்று வழிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைமை அதிகாரி மசஹிரோ நோசாகி கூறிள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு ஒன்று மாநாடு ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக இலங்கை வந்திருந்ததாகவும் அந்த அதிகாரிகள் கடந்த 7 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருந்தாகவும் அறியப்படுகிறது.