நேற்று இரவு 7ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மணியளவி்ல் தலவாக்கலை நகரில் பொருட்களின் விலை அதிகரிப்பை எதிர்த்து தீ பந்த போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும், அரசே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, பெற்றோலின் விலையை குறைக்க வேண்டும், பாணின் விலையைக் குறைக்க வேண்டும்’ என அரசுக்கு எதிராக பல கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபால உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டதும் குப்பிடத்தக்கது.