நாட்டில் இன்று (16) அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியா் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டாா்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டவர். அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். மற்றவர் இலங்கையர். மூன்றாவது நபர் அவரருடன் தொடர்பு பேணியவர். இவர்களைப் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்பான தகவல்களை விசாரித்து வருகிறோம். நாட்டில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நோயாளி தனி நோயாளியாக இருந்தார். ஆனால், இப்போது 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாவதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் நோயாளருக்கு மேலதிகமாக மூவர் அடையாங்காணப்பட்டுள்ளனா். விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளினூடகவே இவர்களில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எந்தெந்த பிரதேசங்களைச் சேர்ந்தர்வர்களுக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள என்பது இதுவரையில் தெளிவாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று வெளிநாட்டுக்கு சென்றவருடன் தொடர்பை பேணியவர்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு முன்னெடுத்து வருகின்றது.