ஒவ்வொரு 100 கிலோகிராம் தேயிலைக்கும் அரசாங்கத்தினால் அறிவிடப்படும் தீர்வை சம்பந்தமான சரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒவ்வொரு 100 கிலோகிராம் தேயிலைக்குமான 400 ரூபா என்ற தீர்வை 300 ரூபாவாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, இலங்கை தேயிலை சபையின் தேயிலை ஊக்குவிப்புக்கும், சந்தைப்படுத்தல் மூலோபாயத்துக்குமான அறவீட்டைச் சேகரித்தல் தொடர்பான ஒழுங்குவிதிகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைக்கும் பங்கமின்றி இந்த வர்த்தமானி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.