Date:

இரசாயன உர பாவனையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய செயலணி

இரசாயன உர பாவனையினால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியை  உருவாக்குவதற்கான செயற்பாடுகளை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். அதேநேரம், தற்போது வரையில் 16 மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, இரசாயன திரவியங்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உலக சுகாதார ஸ்தாபனத்திடம் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட...

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல...