Date:

உலக சந்தையில் இலங்கை தேயிலை எதிர்கொள்ளும் சவால்

உரம் இல்லாதமை காரணமாக, உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையால், உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு, பாரிய தாக்கம் ஏற்படக்கூடும் எனத் தேயிலை சபையின் முன்னாள் தலைவர் லுஸில் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

உரம் இல்லாதமையால், தேயிலை உற்பத்தியின்போது, கழிவுத் தேயிலையின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த சேதனப் பசளைகளைப் பயன்படுத்துவது சிறந்ததாகும்.

ஆனால், இரசாயன உரத்தின் மூலம் கிடைக்கும் நைட்ரஜன் அளவை வழங்க முடியாது.

அவ்வாறெனில் டன் கணக்கில் இட வேண்டும்.

அவ்வாறு செய்தாலும் அது சரிவராது.

உரமற்ற தேயிலை, கடதாசி போன்று இருக்கும்.

இதனால், உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் தரம் குறைந்த அளவில் காணப்படும்.

கடதாசி போன்று இருக்கும்போது, கழிவுத் தேயிலையின் அளவும் அதிகரிக்கும்.

இலங்கையின் தேயிலைதான், உலகில் 30 சதவீதம் அளவில், அதிக விலை கிடைக்கும் தேயிலையாகும்.

இந்நிலையில், தேயிலையின் தரம் குறைவடைகின்றது என்பது மிகவும் பாரிய அபாய நிலையாகும்.

எனவே, இதற்கு உடனடி தீர்வாக நைட்ரஜனை விரைவாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தேயிலை சபையின் முன்னாள் தலைவர் லுஸில் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை...