கெசல்வத்தையில் பவாஸ் என்ற நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 4 வாள்கள் மற்றும் கார் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வாழைத் தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய யோன் வீதியில் சனிக்கிழமை (04) இரவு 11 மணியளவில் மொஹமட் காமில் மொஹமட் பவாஸ் என்பவர் ஒரு குழுவினரால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.