சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றின் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது. இதேவேளை, நாடாளுமன்றில் பாதுகாப்பினை உறுதி செய்யும் வரையில் அமர்வுகளை பகிஷ்கரிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.