Date:

விமானப் படையின் விமானம் அவசரமாக தரையிறக்கம்

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்களில் ஒன்றான செஸ்னா 150 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக  இன்று திங்கள்கிழமை (07) திருகோணமலையில் நிலாவேலி கடற்கரைக்கு வடக்கே உள்ள ஈராகண்டி பகுதிகளில் அவசர அவசரமாக தரையிறங்கியதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

செஸ்னா 150 என்பது,   ஒரு பயிற்சி விமானமாகும்,  இது, விமானிக்கான அடிப்படை  பயிற்சியளிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.

அந்த விமானம் இன்று (07) காலை 10:22 க்கு சீனா வளைகுடாவில் இருந்து புறப்பட்டு காலை 10:48 க்கு அவசர அவசரமாக தரையிறங்கியது.

சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டு விமானிகள் செஸ்னாவில் இருந்தனர், இருவரும் காயமடையவில்லை என்று இலங்கை விமானப்படை பேச்சாளரான குரூப் கெப்டன் துஷன் விஜேசிங்க தெரிவித்தார்.

இரு விமானிகளின் திறமையால் ஒரு பேரழிவு தவிர்க்கப்பட்டது என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

எனினும், இது குறித்து விசாரணை நடத்த விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷனா பதிரண சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பணித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி கோசல நுவான் ஜயவீர எம்பி உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தி (NPP) யின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

தமிழகம் நோக்கி புறப்பட்டார் இந்திய பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துக்கொண்டு...

மாஹோ -அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பை மோடி திறந்து வைத்தார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்தார்.   அங்கு,...

மோடிக்கு புலி படம் குடுத்த சஜித்!

வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த "ஐ-ஒன்" (eye-one)...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373