கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று (28) காலையே தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்துக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடும் நிலையில், சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.