இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வருகைதரும், 2 கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு, தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பூரண தடுப்பூசி பெற்ற இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து செல்பவர்கள், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்கு பிரவேசிக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.