Date:

கொவிட் தொற்று சடலத்துடன் சென்ற வேன் விபத்து; பொலிஸ் அதிகாரி பலி!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (05) காலை 7.30 அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொரோனா சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
May be an image of outdoors
இதற்குப் பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த கொரோனா சடலம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
May be an image of one or more people, people standing, tree and outdoors
மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள், வாகன சாரதி, சடலத்தின் உறவினர் என ஆறு பேர் காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2026 ஹஜ் முகவர் பட்டியலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரீட் மனு தாக்குதல்

ஹஜ் குழுவினால் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் பட்டியலுக்கு...

காலியில் பெருந்தொகை ஹெரோயினுடன் 3 பேர் கைது

காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன்...

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல்

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்து வௌியான தகவல்

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல்...