நாட்டில் செயற்கை உரம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியிருந்ததாகவும் அவ்வாறு நடத்தப்பட்ட போராட்டங்களில் தனது உருவ பொம்மைகளை விவசாயிகள் எரித்ததாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்று போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை விடவும், தானே மக்களிடம் அதிக தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் உருவ பொம்மைகள் கூட, இவ்வாறு இதுவரை எரிக்கப்படவில்லை எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.