கொரோனா தொற்றுக்காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
அவர் தனது முகப்புத்தகத்தில் கீழ் கண்டவாறு பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.
பூரண சுகத்துடன் வீடு திரும்பினேன்.
“எனக்கு ஆறுதல்கள், ஆலோசனைகள், தெரிவித்து, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டு, அன்பையும், நம்பிக்கையையும் நேரடியாகவும், தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் தெரிவித்த கட்சி, கூட்டணி, நண்பர்கள், ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், அதேபோல் எனக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்கிய மருத்துவதுறை நண்பர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்”

