Date:

பஹல கடுகண்ணாவ மண்சரிவு அபாய பகுதியை சீர்செய்ய ஆலோசனை

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாய பகுதியை சீர்செய்து, வர்த்தக நிலையங்களை புனரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாராளுமன்ற விசேட அமர்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவினால் இது தொடர்பான அறிவுறுத்தல் நேற்று (23) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உரிய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் குழுவினரும், கடுகண்ணாவ வர்த்தகர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிய வருகின்றது.

பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தை அடுத்து, கடந்த 10ம் திகதி அந்த வீதியூடான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, பின்னர் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...