இலங்கையில் இருந்து டுபாய் நோக்கி கொண்டு செல்ல முயற்சித்த ஒரு கோடியே 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பணத்துடன் சந்தேக நபர் ஒருவரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கோடி ரூபாய் இலங்கை பணம் மற்றும் 20 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக விமான நிலையத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் பணி புரியும் சுங்க அதிகாரிகள் குழுவினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.