திருகோணமலை – குறிஞ்சங்கேணியில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், பயணிகளை ஏற்றிச்செல்லும் மோட்டார் இழுவை படகு ஒன்று கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாகக் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களில் நான்கு பேருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.