சூர்யா தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். இவர் நடிப்பில் சமீபத்தில் அமேசான் ப்ரேமில் வெளிவந்த படம் ஜெய் பீம்.
இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது, தமிழ் தாண்டி, தெலுங்கு, கன்னடம் ஏன் ஹிந்தி வரை இந்த மொழில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சூர்யா கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றார், ஒரு குறிப்பிட்ட கட்சியினர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ 1 லட்சம் தருகிறேன் என்று பகிரங்கமாக பொதுவெளியில் சொல்கிறார்கள். சாதாரண மக்களுக்கு கூட இதை கேட்டால் கோபம் வரும், அவர்கள் கூட தங்களால் முடிந்த ஆதரவை இணையத்தின் வாயிலாக தந்து வருகின்றனர்.
ஆனால், சக நடிகர்களான விஜய், அஜித் ஏன் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் என்று தலையில் தூக்கி கொண்டாடும் ரஜினிகாந்த் கூட இன்னும் வாய் திறக்கவில்லை.
இவர்கள் தான் இப்படி என்றால் வளர்ந்து வரும் நடிகர்கள் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என எல்லோரும் தங்கள் வேலை சரியாக போனால் சரி என்று இருக்கிறார்களோ என்னவோ, இதுவரை யாரும் வாய் திறந்து ஆதரவு என்று கூட சொல்ல மனம் வரவில்லை.