கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக அண்மையில் நாவுல – அம்பன பிரதேச வைத்தியசாலையில் பிரத்தியேக சிகிச்சை மையமொன்று நிறுவப்பட்டது.
நோயாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் இந்தச் சிகிச்சை மையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மாத்தளை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இங்குத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.
வைத்தியசாலையின் மேற்பார்வையின் கீழ் தமக்கு உணவு வழங்கப்படுவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்படுவது தொடர்பில் மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமிந்த வீரகோனிடம் நாம் வினவியபோது, நோயாளர்கள் தமக்கு இது தொடர்பில் அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக உடன் அமுலாகும் வகையில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.