அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (11) விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயில் வீதியில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின்போது, மஹரகம காவல்துறை பொறுப்பதிகாரிக்கு காயம் ஏற்படுத்தியமை, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அமில சந்தீப மற்றும் கோசல அங்சமாலி, முன்னிலை சோசலிசக் கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்த ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.