பாதீட்டில் துண்டுவிழும் தொகையைக் குறைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கும் இவ்வருட பாதீட்டு திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதில் 1,521 பில்லியன் ரூபாவை, கடனை மீளச் செலுத்துவதற்கு செலவிடப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 980.2 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
இந்தப் பாதீட்டில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்துகிறது.
கொரோனா நிலைமைகளுக்கு முகங்கொடுக்கவும், பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரிவுபடுத்தவும், மருத்துவமனைகளில் வசதிகளை அதிகரிக்கவும் வேண்டியதன் அவசியத்தை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.