Date:

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த புதல்வியான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (06) பிற்பகல் கொழும்பு பிரதம நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டதாக ‘அத தெரண’ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட பணத்தை முறையற்ற வழிகளில் கையாள்வதற்கு (பணச் சுத்திகரிப்பு) உதவியளித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அவரது மூத்த புதல்வி கைது செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...

யாசகம் பெற்று வந்த நபர் உயிரிழப்ப

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி-பியகம வீதியில் உள்ள பண்டாரவத்தை பகுதியில் நேற்று...

அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு...

சிறையில் துடிக்கும் இம்ரான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான்,...