இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை ஆட்டமிழக்க செய்தார்.
இது சர்வதேசம், உள்ளூர், லீக் உள்பட ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் ரஷித் கானின் 400-வது விக்கெட்டாக (289 ஆட்டம்) அமைந்தது.
இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய 4-வது வீரர் என்ற சிறப்பை 23 வயதான ரஷித் கான் பெற்றார்.
டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதல் 3 இடங்களில் வெயின் பிராவோ (553 விக்கெட்), சுனில் நரைன் (425 விக்கெட்), இம்ரான் தாஹிர் (420 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.