தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய அரசு சட்டத்தரணிகளால் அந்த நாட்டு நீதிமன்றத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகார துஷ்பிரயோகம், தேசத்துரோகம் மற்றும் ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைக்க முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் மீது சுமத்தப்பட்டுள்ளன.
சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த அவர் முயற்சித்ததாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது






