அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக டிஜிட்டல் அட்டை (Digital Card) முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் ஊடாக எரிபொருள் தேவைக்கேற்ப, நிகழ்நிலை வங்கி முறைமையின் ஊடாக அதற்குரிய பணத்தை மீளச் செலுத்த முடியும்.
மேலும் தனிநபர்களின் தலையீடு குறைவடைவதால், அதிக வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.
அத்துடன் முறையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை வங்கி மற்றும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் (CEYPETCO) ஆகியன இணைந்து இந்த டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இதற்கமைய, முதற்கட்டமாக ஒரு முன்னோடித் திட்டமாக ஜனாதிபதி அலுவலகத்தின் வாகனக் கூட்டமைப்புக்கு இந்த முறையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அங்கு கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து, ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட திணைக்கள வாகனங்களுக்கும் இந்த முறையை விரிவுபடுத்த ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது






