Date:

டிட்வா சூறாவளி பாதிப்பு : 100 பாடசாலைகளைப் பயன்படுத்த முடியாத நிலை

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 100 பாடசாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

குறித்த பாடசாலைகளில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், சில பாடசாலைகள் தொடர்ந்தும், பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைத்துள்ள முகாம்களாக செயற்படுகின்றன.

 

இந்த நிலையில், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

எனினும், அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், அது குறித்தும் ஆராய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி...

வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான 3,000 ரூபாய் பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும்...

’டித்வா நிவாரண பணிகளை துரிதப்படுத்துக’

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை மிகவும் திறமையாகவும்...

நாளை 04 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் நாளை...