Date:

லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்த நேரத்தில் விலைத் திருத்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படவுள்ளது.

 

5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 1,482 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 694 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இதேவேளை நேற்று (1) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4250 ரூபாவாகும்.

 

அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1710 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சற்றுமுன் அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள...

#BREAKING | குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்! #TamilNews | #Iran | #KuwaitAirport | #Israel

குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்...

தோஹா, கட்டார் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை அடுத்து தோஹா, கட்டாரில்...

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்??

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு...