பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள கழிப்பறையில் ‘கரு’ பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் அறிவித்துள்ளது.
விடுதியின் பிரதி தலைமை ஆசிரியை அளித்த புகாரின் பேரில், பேராதனை பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள், கரு பகுதியை பிரேத பரிசோதனைக்காக பேராதனை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
பேராதனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






