இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்.
பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இன்று (4) காலை இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                    




