Date:

எச்சரிக்கை – மண்சரிவு அபாயம்

சீரற்ற வானிலையால் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களின் 2 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவிற்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு...

ரைஸ், கொத்து, பிரியாணிக்கு இன்று நள்ளிரவுடன் விலை குறைப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய...

பூட்டான் நாட்டு UN பிரதி வதிவிடப் பிரதிநிதியாக பாதில் பாக்கீர் மாக்கார்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) பூட்டான் நாட்டுக்கான பிரதி...

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக தாமரைத் தடாகம் பச்சை வெள்ளை நிறங்களில் ஒளிரும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல்...