கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (31) விமான நிலைய வளாகத்திலிருந்து கொகேய்னுடன் வெளியேற முயன்ற கென்ய பிரஜையொருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே 650 என்ற விமானத்தில் இலங்கை வந்த குறித்த நபரிடமிருந்து பெருந்தொகையான கொகேய்ன் அடங்கிய வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை விமான நிலைய வளாகத்தில் உள்ள உடல் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் சோதனையிட்டபோது, அவரது வயிற்றினுள் சந்தேகத்துக்கிடமான பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 39 வயதான கென்ய பிரஜை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.