Date:

முன்னாள் காதலர் பற்றி இஷாரா வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

 

தனது முன்னாள் காதலரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவரின் மூலம் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரைத் தான் சந்தித்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

 

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை ‘பத்மே’ தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா கூறியுள்ளார்.

 

“எப்படியாவது அவனை வைத்து வேலையை முடித்துக்கொள்” என்று ‘பத்மே’ தன்னிடம் கூறியதாகவும், அதன்படி சமிந்து தில்ஷானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, கொலையைச் செய்யுமாறு தான் அவரைத் தூண்டியதாகவும் இஷாரா செவ்வந்தி அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்திற்காக தான் எந்தவித பணமும் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே,இஷாரா செவ்வந்தி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (17) பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேரை கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் மனைவியின் தாயார் தங்கியிருந்த வீட்டில் இஷாரா செவ்வந்தி ஒன்றரை நாட்கள் மறைந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணைக் குழு ஒன்று இஷாரா செவ்வந்தியுடன் நேற்று தொட்டங்கொட பகுதிக்குச் சென்று, அங்கு அவருக்கு அடைக்கலம் கொடுத்த வேறொரு நபரையும் கைது செய்தது.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னர் தப்பிச் சென்ற இஷாரா செவ்வந்தி, அந்த நபரின் வீட்டில் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த நபர், தற்போது வெளிநாட்டில் இருக்கும் ‘மத்துகம ஷான்’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் பாடசாலை நண்பர் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நிதிக்குற்றப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மாமடல பிரதேசத்தில் டி56 ரக துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களுடன் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து டி56 துப்பாக்கிக்கான 63 தோட்டாக்கள், இரண்டு மகசின்கள் , 12 போர் ரக துப்பாக்கிகள் 2, அதற்கான 25 தோட்டாக்கள் மற்றும் ரிவோல்வர் துப்பாக்கிக்கான 34 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...

உணவுக்கு சிறந்த நாடு – இலங்கை எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் தனது பெயரை நிலை...