Date:

கல்கிசை குழு மோதலில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு அங்குலானை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் ஒருவர் லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய கல்கிஸ்சை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு பயப்படவில்லை

காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல்...

சம்பத் மனம்பேரி மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை

ஐஸ்' போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு...

குடு ரொஷான் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள...

பிணையில் விடுதலையானார் அர்ச்சுனா எம்.பி

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற...