மியன்மாரில் 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தப்படும் என இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹிலியாங் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், தேர்தலில் மோசடி நடைபெற்றதால் தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
எனவே நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும்.
இதனால் அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 4 ஆண்டாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்