நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளில், 100 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடுப்பூசி செலுத்தலுக்கு அவசியமான பின்னணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது தேவையான தடுப்பூசியை, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் கலந்துரையாடி, பெற்றுக்கொள்வதற்கான பின்னணி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தொழிற்சங்க போராட்டம் எனும்போது, 400 அல்லது 500 தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைந்து, கொவிட் ஒழுங்குவிதிகளுக்கு அமைய தாங்கள் செல்கிறோம் என்றால் அது நகைச்சுவையானது என அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை மேலும் அதிகரிப்பதே அவர்களின் நோக்கம் என்றால், நாட்டின் நலன்கருதி அதற்காக சில தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.