நேற்றைய தினம் 29 கொவிட் மரணங்கள் பதிவானதை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொவிட் மரணங்களின் அதிகரிப்பிற்கு கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமா என்பது தொடர்பில் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.