Date:

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து 700 கிலோ மீற்றர் தொலைவில் மாலைதீவு அமைந்துள்ளது. அந்த நாட்டின் 60 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று சிறப்பு விமானத்தில் மாலைதீவில் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். சுதந்திர தின சதுக்கத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

Breaking கொலன்னாவை முனையத்தில் எரிபொருள் விநியோகம் பாதிப்பு

இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த...

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...