Date:

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

 

இந் நிலையில், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.    தனது தந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து,

துணிச்சலான புதிய உலகத்தை நோக்கிய உங்களின் பயணத்தை இன்றைய நாள் குறிக்கிறது. இன்று ராஜ்ய சபாவில் வலிமையுடனும், உற்சாகத்துடனும் அவையில் எதிரொலிக்கும் வகையில் உங்களுக்கே உரிய குரலில் நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்ததைப் பார்த்தது என்றென்றும் என் மனதில் பதிந்த ஒரு தருணம்.

எப்போதும் போல, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அடையவும் நான் விரும்புகிறேன் என ஸ்ருதிஹாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...