Date:

கல்வியமைச்சு முன்வைத்துள்ள மாற்று வழிகள்

தாமதமாகி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கல்வி நிறைவாண்டை உரிய வகையில், நிறைவுறுத்துவதற்கான மாற்று வழிகளைப் பயன்படுத்தக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, டிசம்பர் மாதம் கல்வியாண்டு நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் அடுத்த தரத்திற்கு தரம் உயர்த்தப்படுவதுடன், கைவிடப்பட்ட பாட விதானங்களை ஏதேனும் ஒரு முறையில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்துடன் கல்வி அமைச்சு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதுடன், மாற்று வழியாகச் சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடாத்தல், வார நாட்களில் மேலதிக நேரத்தை செலவிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நேற்றைய தினம் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளில் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

நேற்றைய தினம் 94 சதவீதமான அதிபர்களும் 90 சதவீதமான ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளித்திருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு...

கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார் பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார். பிரதி...

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை...

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று...