Date:

லஹிரு குமார மற்றும் லிட்டன் தாஸிற்கு அபாரதம்

ஐசிசி ரி20 போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின் 15 ஆவது போட்டி நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்தவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் லிட்டன் தாஸ் மற்றும் மொஹம்மட் நயீம் ஆகியோர் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கினர்.

போட்டியின் 6 ஆவது ஓவரை வீசிய லஹிரு குமாரவின் பந்தில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்திருந்தார்.

இதன்போது லஹிரு குமார மற்றும் லிட்டன் தாஸிற்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் லஹிரு குமாரவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25 விகிதமும் லிட்டன் தாஸிற்கு போட்டியின் சம்பளத்தில் 15 விகிதமும் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; 14 பணியாளர்கள் மீட்பு

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில், தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய வர்த்தக...