மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம் கோரியுள்ளது.
கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்ப பிரிவுகளை நாளை (25) முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக உரியச் சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் இது தொடர்பில் ஆசிரியர் அல்லது அதிபருக்கு அறியப்படுத்துமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கோரியுள்ளார்
Date:
பெற்றோர்களிடம் சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை!
