Date:

பொத்துவில் பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அன்னாசிப் பழம்…!

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27.06.2025) நடைபெற்றது.  நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்மொழியப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அன்னாசி சின்ன சுயேட்சை உறுப்பினருமான  சட்டத்தரணி எஸ். எம். எம். முஷர்ரப்  ஏகமானதாக தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

உப தவிசாளர் பதவிக்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.மாபிர், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்நத டீ.சுபோகரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. வாக்கெடுப்பில் டீ.சுபோகரன் 3 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.மாபிர் ஆதரவாக 13 வாக்குகளைப் பெற்று சபையில் உப தவிசாளராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.மாபிர் அறிவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ.ல.மு.கா பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, ஸ்ரீ.ல.மு.கா பொத்துவில் அமைப்பாளரும் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ்.வாசித், ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ.சி. சமால்தீன், முக்கியஸ்தர்கள் உட்பட உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...

எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்,...

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில...

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...