Date:

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

போரா மாநாடு இன்று(25) கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 

இந்த மாநாடு 25 மற்றும் 27 முதல் ஜூன் 05 வரை நடைபெறவுள்ளது.

 

அதற்கமைய குறித்த தினங்களில் காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை மருதானை டார்லி வீதி, காமினி சுற்றுவட்டத்திலிருந்து டி.ஆர். விஜயவர்தன மாவத்தைக்கு கொள்கலன் வாகனங்கள், கல், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் நுழைவு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

அதேபோல் 27 முதல் ஜூன் 05 வரை காலை 07:00 முதல் காலை 11:30 வரை மற்றும் பிற்பகல் 03:00 முதல் இரவு 10:00 மணி வரையும் பம்பலப்பிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசலில் போரா மாநாடு நடைபெறவுள்ளது.

 

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள கிளென் ஆபர் திசைக்கு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, காலி வீதியிலிருந்து கிளென் ஆபர் பகுதிக்கு நுழைந்து கடற்கரை வீதிக்கு போக்குவரத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...