Date:

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டும் ஆணைக்குழு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பின்னர் இழப்பு ஏற்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த வைத்தியர் சமீபத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் பல குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அவற்றில் வெளிப்புற நிறுவனங்களிலிருந்து அறுவை சிகிச்சை உபகரணங்களைப் பெற்று நோயாளிகளுக்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டும் உள்ளடங்கும்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சுமார் 77 நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனூடாக பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது இந்த முறைகேடு தொடர்பில் அறிந்தவர்கள் ஆணைக்குழுவின் அவசர தொலைபேசி இலக்கமான 1954 அல்லது ciaboc_gen@ciaboc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல்களை வழங்கலாம் என்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...