Date:

மனைவியின் உடலிலிருந்து வெட்டப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் வந்த கணவன்!

தனது மனைவியை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்றுகாலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் வீசியதாகவும தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த ஆசிரியையான சுகிர்தரன் சுவர்ணலதா வயது3 2 என்ற பெண்ணே சாவடைந்துள்ளார்.

அவர் கர்பிணிபெண் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆரம்பபிரிவிற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இன்று காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து கணவனும், மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றுள்ளனர்.

இதன்போதே சின்னப்பூவரசங்குளத்திற்கு அண்மித்த காட்டுப்பகுதியில் குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் என்ற குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து பொலிஸ்நிலையத்தில் சரண்அடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய நடைமுறை

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக டிஜிட்டல் அட்டை (Digital...

சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான விலை அதிகரிப்பு

உள்நாட்டு நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில், சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான அரசாங்கத்தின்...

Breaking News விமலின் சத்தியாகிரகம் நிறைவு

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை...

ஓராண்டு காலம் தாமதமாகும் ஆறாம் தர கல்விச் சீர்திருத்தம்!

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு...